மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தல்: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உழைத்தவர்களுக்கு நன்றி இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் அறிக்கை + "||" + Assembly Election: Thanks to those who worked for the Secular Progressive Alliance Communist Secretary of State for India Report

சட்டமன்ற தேர்தல்: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உழைத்தவர்களுக்கு நன்றி இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் அறிக்கை

சட்டமன்ற தேர்தல்: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உழைத்தவர்களுக்கு நன்றி இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் அறிக்கை
சட்டமன்ற தேர்தல்: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உழைத்தவர்களுக்கு நன்றி இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் அறிக்கை.
சென்னை, 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் அதிகாரத்தில் இருந்து வரும் பா.ஜ.க.வும், அதன் அதிகார அரசியலுக்கு அடிபணிந்து விட்ட அ.தி.மு.க.வின் சுயநல கும்பலும் தமிழகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் முற்போக்கு வளர்ச்சியினை சிதைத்துவிட்டன.

இந்த தீய சக்திகளிடம் இருந்து தமிழகத்தை மீட்க தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவானது. இந்த கூட்டணிக்கு மக்கள் காட்டிய ஆதரவை தடுக்க பா.ஜ.க. தவறான பரப்புரையை மேற்கொண்டன. வருமான வரித்துறையை தவறாக பயன்படுத்தி இழிவுபடுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டது.

இருந்தபோதிலும் கூட்டணி கட்சி தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், செயல் வீரர்கள் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்கு சோர்வில்லாமல் பணியாற்றினர். இவர்களுக்கும், தேர்தலில் பங்கேற்று வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநிலக்குழு இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய அரசு அமைவதற்கு முன்பு துணை வேந்தர்களின் பெயர்களை கவர்னர் அவசர அவசரமாக அறிவிப்பது அழகல்ல துரைமுருகன் அறிக்கை
புதிய அரசு அமைவதற்கு முன்பு துணை வேந்தர்களின் பெயர்களை கவர்னர் அவசர அவசரமாக அறிவிப்பது அழகல்ல என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
2. எனக்கும், கட்சியினருக்கும் இந்த தேர்தல் புதிய அனுபவம்: மண், மொழி, மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் கமல்ஹாசன் அறிக்கை
இந்த தேர்தல் தனக்கும், தன்னுடைய கட்சியினருக்கும் புதிய அனுபவம் என்றும், மண், மொழி, மக்களை காக்க என்றும் களத்தில் நிற்போம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
3. பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்ற மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: புதிய வணிக விடியலுக்கு, வணிகர்கள் அடித்தளம் அமைக்கவேண்டும்
பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்ற மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: புதிய வணிக விடியலுக்கு, வணிகர்கள் அடித்தளம் அமைக்கவேண்டும் ஏ.எம்.விக்கிரமராஜா அறிக்கை.
4. தேர்தல் அன்று வாக்காளர்களுக்கு வழங்க வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 2,051 மதுபாட்டில்கள் பறிமுதல் அ.தி.மு.க. கிளை செயலாளர் உள்பட 2 பேர் கைது
தேர்தல் அன்று வாக்காளர்களுக்கு வழங்க வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2,051 மதுபாட்டில்களை தேர்தல் கூடுதல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க. கிளைசெயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. திரையுலகின் உயரிய விருது வழங்கியதற்காக மத்திய அரசுக்கு, ரஜினிகாந்த் நன்றி
திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கியதற்காக மத்திய அரசுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.