மாநில செய்திகள்

ஓட்டுபோட கட்சி கொடியுடன் காரில் வந்தார்: நடிகை குஷ்பு மீது மற்றொரு வழக்கு + "||" + The driver came in the car with the party flag: Another case against actress Khushbu

ஓட்டுபோட கட்சி கொடியுடன் காரில் வந்தார்: நடிகை குஷ்பு மீது மற்றொரு வழக்கு

ஓட்டுபோட கட்சி கொடியுடன் காரில் வந்தார்: நடிகை குஷ்பு மீது மற்றொரு வழக்கு
ஓட்டுபோட கட்சி கொடியுடன் காரில் வந்தார்: நடிகை குஷ்பு மீது மற்றொரு வழக்கு போலீசார் நடவடிக்கை.
சென்னை, 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் நடிகை குஷ்பு போட்டியிட்டார். அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். அப்போது அவர், பா.ஜ.க. கொடியுடன் கூடிய காரில் வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.

இது, தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பானது என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை பட்டினம்பாக்கம் போலீசார் குஷ்பு மீது தேர்தல் நன்னடத்தை விதியை மீறியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

ஏற்கனவே தேர்தல் விதிகளுக்கு புறம்பாக அனுமதியின்றி மசூதி அருகே பிரசாரம் செய்ததாக குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. புராண கதையில் நடிக்க சம்பளத்தை குறைத்த நடிகை சமந்தா
சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் சகுந்தலையாக சமந்தா நடிக்கிறார்.
2. வாக்காளர்களிடம் முக கவசம் அணிய வலியுறுத்தியபடி ஓட்டு கேட்ட நடிகை ஸ்ரீபிரியா
மக்கள் நீதி மய்யம் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா, வாக்காளர்களிடம் முக கவசம் அணிய வலியுறுத்தியபடி ஓட்டு கேட்டார். அப்போது, டார்ச்லைட் வெளிச்சம் போல மக்களுக்கு ஒளியாக இருப்பேன் என பேசினார்.
3. ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு
ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4. வித்தியாசமான வேடம் அமைவது அதிர்ஷ்டம் நடிகை ராஷி கன்னா
தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்தவர் ராஷி கன்னா. ஜெயம் ரவி ஜோடியாக அடங்க மறு, விஷால் ஜோடியாக அயோக்யா, விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
5. முதலமைச்சரின் தாயார் குறித்து அவதூறாக பேசிய கட்சி சராசரி தமிழ் பெண்களுக்கு மரியாதை கொடுக்குமா? ஸ்மிருதி இரானி
முதலமைச்சரின் தாயார் குறித்து அவதூறாக பேசிய கட்சி சராசரி தமிழ் பெண்களுக்கு மரியாதை கொடுக்குமா என மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பினார்.