சத்தீஷ்கார் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் ஊரடங்கு


சத்தீஷ்கார் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் ஊரடங்கு
x
தினத்தந்தி 8 April 2021 12:27 AM GMT (Updated: 8 April 2021 12:27 AM GMT)

சத்தீஷ்கார் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் நாளை (9-ந் தேதி) முதல் 19-ந் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.

ராய்ப்பூர், 

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, சத்தீஷ்கார் மாநிலத்தின் ராய்ப்பூர் மாவட்டத்தில் நாளை (9-ந் தேதி) முதல் 19-ந் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள ராய்ப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.பாரதிதாசன், மாநிலத் தலைநகர் ராய்ப்பூர் முதல், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு ஏப்.9-ந் தேதி மாலை 6 மணி முதல் ஏப்.19-ந் தேதி காலை 6 மணி வரை பல செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. 

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட நாட்களில், மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வங்கிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மதுபானக் கடைகள், சுற்றுலா, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவை மூடியிருக்கும். 

அதேநேரம், மருந்தகங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ரெயில் மற்றும் விமான நிலையங்கள் வழக்கம்போல் இயங்கும். மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story