மாநில செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு, திருமாவளவன் வலியுறுத்தல் + "||" + Thirumavalavan urged the Chief Electoral Officer to ensure the security of the voting machines

வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு, திருமாவளவன் வலியுறுத்தல்

வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு, திருமாவளவன் வலியுறுத்தல்
வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு, திருமாவளவன் வலியுறுத்தல்.
சென்னை, 

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு, சரி செய்யப்பட்டது. எனினும் எந்த ஒரு இடத்திலும் வாக்குப்பதிவு நிறுத்தப்படவில்லை. சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தி முடித்ததற்காகத் தலைமை தேர்தல் அதிகாரியையும், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களையும் பாராட்டுகிறேன். அதேநேரத்தில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பை தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் விழிப்போடு இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியான முறையில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2-ந்தேதி வரை அவற்றைப் பாதுகாப்பதிலும், தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தனிக்கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் கட்டிட பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கட்டிட பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
3. தமிழ்நாட்டில் நுழைந்துவிட முயற்சிக்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது; திருமாவளவன் பேச்சு
கருணாநிதியும், ஜெயலலிதாவும் இல்லாத தமிழ்நாட்டில் நுைழந்துவிட முயற்சிக்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது என்று திருமாவளவன் எம்.பி. பேசினார்.
4. அ.தி.மு.க. தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைந்துவிடுவார்கள்: தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது திருமாவளவன் பேச்சு
அ.தி.மு.க. தலைவர்கள் அனைவரும் பா.ஜ.க.வில் இணைந்து விடுவார்கள். தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் அ.தி.மு.க. என்ற கட்சியே இருக்காது என்று திருமாவளவன் கூறினார்.
5. கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தால் மட்டுமே தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாக்க முடியும்
கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்தால் மட்டுமே தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாக்க முடியும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.