மாநில செய்திகள்

முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை: கொரோனா தடுப்பு பற்றி தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆய்வு + "||" + PM consults with First Ministers today: Chief Secretary Rajiv Ranjan's study on corona prevention

முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை: கொரோனா தடுப்பு பற்றி தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆய்வு

முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை: கொரோனா தடுப்பு பற்றி தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆய்வு
முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை: கொரோனா தடுப்பு பற்றி தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆய்வு.
சென்னை, 

இந்தியாவில் மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வெகுவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அந்த கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. எனவே தொற்று வெகுவேகமாக பரவி, தொற்று எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்தது. கொரோனா பரவலுக்கு பிரசார கூட்டங்களும் காரணமாய் அமைந்தன. எனவே மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்று மக்கள் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்தது. இந்த நிலையில் மாநில முதல்-அமைச்சர்களுடன் இன்று (வியாழக்கிழமை) காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில் நேற்று தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமைச்செயலகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துதல் தொடர்பாக, பல்வேறு அரசு துறை செயலாளர்கள், போலீஸ் உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த கூட்டத்தில் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, தொழில்துறை முதன்மை செயலாளர் என்.முருகானந்தம்,

பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் க.மணிவாசன், பொதுத்துறை முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் பி.உமாநாத், பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் டி.ஜெகநாதன் ஆகியோர் பங்கேற்றனர். பிரதமர் இன்று மேற்கொள்ளும் ஆலோசனையில், தமிழக அரசின் சார்பில் என்னென்ன கருத்துகளை முன்வைக்க வேண்டும்? என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸ் கமிஷனர் ஆய்வு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார்
சென்னை லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2. போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முதல் மாடியில் வைக்கப்பட்டுள்ளது.
3. தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சேலம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சேலம் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு நடத்தினர்.
4. திருவாரூர் அருகே ரூ.3.61 கோடி மதிப்பில் சாலை பணி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ஆய்வு
திருவாரூர் அருகே ரூ.3.61 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் சாலை பணிகளை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் கீதா ஆய்வு செய்தார்.
5. லடாக் சென்று ஆய்வு செய்யும், பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு
பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற குழு, லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்குக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளது.