மாநில செய்திகள்

வாக்குப்பதிவு சதவீதத்தில் பாலக்கோடு முதலிடம்; வில்லிவாக்கத்துக்கு கடைசி இடம் + "||" + Balakod tops in turnout; Last place for archery

வாக்குப்பதிவு சதவீதத்தில் பாலக்கோடு முதலிடம்; வில்லிவாக்கத்துக்கு கடைசி இடம்

வாக்குப்பதிவு சதவீதத்தில் பாலக்கோடு முதலிடம்; வில்லிவாக்கத்துக்கு கடைசி இடம்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6-ந்தேதி நடைபெற்றது. அதில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதமும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.52 சதவீதமும் பதிவாகியுள்ளன.
சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 6-ந்தேதி நடைபெற்றது. அதில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீதமும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.52 சதவீதமும் பதிவாகியுள்ளன.

சோளிங்கரில் 80.01 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

80 சதவீதத்துக்கும் மேல் 37 தொகுதிகளில் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. அதில் பாலக்கோடு (87.33 சதவீதம்), குளித்தலை (86.15), எடப்பாடி (85.6), வீரபாண்டி (85.53), ஒட்டன்சத்திரம் (85.09) ஆகியவை அடங்கும்.

132 தொகுதிகளில் 70 சதவீதம் முதல் 80 சதவீதத்துக்குள் வாக்குகள் பதிவாகியுள்ளன.

குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகின. அடுத்ததாக, தியாகராயநகர் (55.92), வேளச்சேரி (55.95), மயிலாப்பூர் (56.59), அண்ணாநகர் (57.02) ஆகிய தொகுதிகள் வருகின்றன. 15 தொகுதிகளில் 55 முதல் 60 சதவீதத்துக்குள் வாக்குகள் பதிவாகியுள்ளன.

நட்சத்திர வேட்பாளர்களைக் கொண்ட தொகுதிகளை கவனித்தால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட எடப்பாடி தொகுதியில் அதிகபட்சமாக 85.60 வாக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்ததாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்ட போடி (73.65), முதல்-அமைச்சர் வேட்பாளரான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் (60.52), அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிட்ட கோவில்பட்டி (67.43), நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்ட திருவொற்றியூர் (65), மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு (60.72) ஆகிய தொகுதிகள் வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வாக்களிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளிலும் 69.60 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் வாக்களித்துள்ளனர்.
2. 7 தொகுதிகளிலும் பெண்கள் வாக்குப்பதிவு அதிகம்
மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் தான் கூடுதலாக வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
3. வாக்குப்பதிவில் திருப்பத்தூர் தொகுதி அதிகம்
சிவகங்கை மாவட்ட வாக்குப்பதிவில் திருப்பத்தூர் தொகுதி அதிகம் பதிவாகி உள்ளது.
4. 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது- பொதுமக்கள் ஆர்வமாக வந்து ஓட்டு போட்டனர்
ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பொதுமக்கள் ஆர்வமாக வந்து ஓட்டு்ப்போட்டனர்.
5. ஒரே ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் ஒரே ஒரு வாக்குச்சாவடியில் இரவு 7 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு நடைபெற்றது.