மாநில செய்திகள்

“கொரோனா 2வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” - தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் + "||" + Stalin urges DMK volunteers to raise awareness about Corona 2nd wave

“கொரோனா 2வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” - தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

“கொரோனா 2வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” - தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
பொதுமக்களுக்கு கொரோனா 2வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொண்டர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் பதிவாகியுள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், கொரோனா வைரசின் 2வது அலை குறித்து மருத்துவர்களும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால், மீண்டும் ‘ஒன்றிணைவோம் வா’ இயக்கம் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா 2வது அலை குறித்து மருத்துவர்களும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள். மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்குங்கள். வாய்ப்புள்ள இடங்களில் முகக்கவசம், சானிடைசர் வழங்கிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கோடை காலத்தில் மக்களின் தாகம் தணிக்க திமுகவின் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்றும் தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் எனவும் தொண்டர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டைரக்டருக்கு கொரோனா
தெலுங்கில் அர்த்தங்கி, ஸ்ரீ கிரிஷ்ணா, ராஜன்னா, ஸ்ரீ வள்ளி ஆகிய படங்களை இயக்கியவர் விஜயேந்திர பிரசாத். பாகுபலி படத்துக்கு திரைக்கதை எழுதி பிரபலமானார்.
2. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது சென்னையில் 1,500 பேருக்கு தொற்று
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டுகிறது. சென்னையில் 1,500 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 2-வது அலை உருவாகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது.
3. கொரோனாவில் இருந்து குணம்: கனிமொழி எம்.பி. வீடு திரும்பினார் தனிமைப்படுத்திக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தல்
கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கனிமொழி எம்.பி. நேற்று வீடு திரும்பினார். அவரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
4. ரெயில்வே பாதுகாப்புப்படையினருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
ரெயில்வே பாதுகாப்புப்படையினருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம் இதுவரை 70 சதவீதம் பேர் போட்டுக்கொண்டனர்.
5. சென்னையில் இன்று முதல் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை
சென்னையில் இன்று முதல் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.