மாநில செய்திகள்

கொரோனாவால் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு + "||" + Declaration of a village as a restricted area due to Corona

கொரோனாவால் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கொரோனாவால் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொரோனா தொற்று காரணமாக ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்,

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அங்கு தற்போது 338 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அசோக் நகர் மற்றும் நாராயணன் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருக்களை மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவித்து சீல் வைத்தனர். 

இதே போல் நிலக்கோட்டை அருகே உள்ள ஜல்லிப்பட்டி கிராமத்தில் கொரோனா தொற்று பரவல் கண்டறியப்பட்டதையடுத்து, அந்த கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. “கொரோனா 2வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” - தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
பொதுமக்களுக்கு கொரோனா 2வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தொண்டர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. டைரக்டருக்கு கொரோனா
தெலுங்கில் அர்த்தங்கி, ஸ்ரீ கிரிஷ்ணா, ராஜன்னா, ஸ்ரீ வள்ளி ஆகிய படங்களை இயக்கியவர் விஜயேந்திர பிரசாத். பாகுபலி படத்துக்கு திரைக்கதை எழுதி பிரபலமானார்.
3. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது சென்னையில் 1,500 பேருக்கு தொற்று
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா வைரசால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை எட்டுகிறது. சென்னையில் 1,500 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 2-வது அலை உருவாகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது.
4. கொரோனாவில் இருந்து குணம்: கனிமொழி எம்.பி. வீடு திரும்பினார் தனிமைப்படுத்திக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தல்
கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கனிமொழி எம்.பி. நேற்று வீடு திரும்பினார். அவரை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
5. ரெயில்வே பாதுகாப்புப்படையினருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
ரெயில்வே பாதுகாப்புப்படையினருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம் இதுவரை 70 சதவீதம் பேர் போட்டுக்கொண்டனர்.