பராமரிப்பு பணி: சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரெயில்கள் ரத்து


பராமரிப்பு பணி: சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரெயில்கள் ரத்து
x

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரெயில்வே பகுதிக்குட்பட்ட காசிபேட்-பல்கர்ஷா ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் வழியாக செல்லும் கோவை-நிஜாமுதீன் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06077) வருகிற 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் நிஜாமுதீன்-கோவை சிறப்பு ரெயில் (06078) வருகிற 14 மற்றும் 21-ந் தேதிகளிலும், கோரக்பூர்-கொச்சிவேலி சிறப்பு ரெயில் (வண்டி எண் 02511) 11, 15, 16, 18, 22 மற்றும் 23-ந் தேதிகளிலும், மறுமார்க்கமாக செல்லும் கொச்சிவேலி-கோரக்பூர் சிறப்பு ரெயில் (வண்டி எண் 02512) 13, 14,18,20 மற்றும் 21-ந் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் பரோனி-எர்ணாகுளம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 02521) 12, 19 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கத்தில் இருந்து செல்லும் எர்ணாகுளம்-பரோனி சிறப்பு ரெயில் (வண்டி எண் 02522) 16, 23 ஆகிய தேதிகளிலும், திருவனந்தபுரம்- நிஜாமுதீன் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06167) 13, 20 ஆகிய தேதிகளிலும், மறுமார்க்கமாக செல்லும் நிஜாமுதீன்-திருவனந்தபுரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06168) 16, 23 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகின்றன. பராமரிப்பு பணிகள் காரணமாக மேற்கூறிய ரெயில்கள் உள்பட சேலம் வழியாக செல்லும் 12 சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story