மாநில செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்த 1,500 துணை ராணுவத்தினர் சொந்த ஊர் திரும்பினர் + "||" + 1,500 paramilitaries who had come to Tamil Nadu for election security returned home

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்த 1,500 துணை ராணுவத்தினர் சொந்த ஊர் திரும்பினர்

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகம் வந்த 1,500 துணை ராணுவத்தினர் சொந்த ஊர் திரும்பினர்
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைந்தது. தேர்தல் வாக்குப்பதிவின்போது சென்னையில் மட்டும் 23,500 போலீசார் ஈடுபட்டனர்.
சென்னை, 

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைந்தது. தேர்தல் வாக்குப்பதிவின்போது சென்னையில் மட்டும் 23,500 போலீசார் ஈடுபட்டனர். மேலும், வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 18 மத்திய காவல் படையினர், 10 சிறப்பு காவல் படையினர், 3 ஆயிரம் ஊர்காவல் படையினர், 1,800 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஊர்காவல் படையினர், 700 ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் என மொத்தம் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 58 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தற்போது வாக்கு எண்ணும் மையங்களிலும் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பாதுகாப்புக்காக வந்திருந்த சுமார் 45-க்கும் மேற்பட்ட கம்பெனி துணை ராணுவத்தினர் படிப்படியாக சொந்த மாநிலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருந்தது.

அதன்படி, நேற்று மாலை 5 மணியளவில் 8 கம்பெனி துணை ராணுவத்தினர், இரவு 10-க்கு மேல் மற்றொரு 8 கம்பெனி துணை ராணுவத்தினர் என சென்டிரலில் இருந்து ராஜஸ்தானுக்கு புறப்பட்டனர். மொத்தம் 1,500 துணை ராணுவத்தினர் நேற்று சென்னையில் இருந்து வடமாநிலம் சென்றுள்ளனர். மீதம் உள்ளவர்களும் படிப்படியாக சொந்த மாநிலம் செல்ல உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் முடிந்த பிறகும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 பேர் மீது வழக்கு
தேர்தல் முடிந்த பிறகும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 பேர் மீது வழக்கு.
2. அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் பயங்கரம் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகொலை
அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
3. முககவசம் அணியாதவர்களுக்கு ஓட்டு போட அனுமதி கிடையாது, 3,074 வாக்குச்சாவடிகள் ‘வெப் கேமரா’ மூலம் கண்காணிப்பு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
முககவசம் அணியாதவர்களுக்கு ஓட்டு போட அனுமதி கிடையாது, 3,074 வாக்குச்சாவடிகள் ‘வெப் கேமரா’ மூலம் கண்காணிப்பு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
4. மாமல்லபுரம் கோவர்த்தனகிரி குடைவரை சிற்பங்களை பாதுகாக்க மரத்தடுப்புகள் தொல்லியல் துறையினர் நடவடிக்கை
காதல் ஜோடிகள் தங்கள் பெயர்களை எழுதி அசிங்கப்படுத்துவதால் மாமல்லபுரம் கோவர்த்தனகிரி குடைவரை சிற்பங்களை பாதுகாக்கும் வகையில் மரத்தடுப்புகள் அமைத்து தொல்லியல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
5. திருவொற்றியூரில் தி.மு.க.வினரை தாக்கிய அ.தி.மு.க.வினர் 2 பேர் கைது
திருவொற்றியூரில் பணப்பட்டுவாடாவை தடுக்க முயன்ற தி.மு.க.வினரை தாக்கியதாக அ.தி.மு.க. வட்ட செயலாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.