மக்கள் நலன் காக்க ஒன்றிணைவோம்: தண்ணீர் பந்தல்கள் அமைத்து, கபசுர குடிநீர் வழங்குங்கள் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் + "||" + Let's unite for the welfare of the people: Set up water tanks and provide safe drinking water to the volunteers, MK Stalin's request
மக்கள் நலன் காக்க ஒன்றிணைவோம்: தண்ணீர் பந்தல்கள் அமைத்து, கபசுர குடிநீர் வழங்குங்கள் தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தி.மு.க. தொண்டர்கள் தண்ணீர் பந்தல்கள் அமைத்தும், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவும் வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை,
தேர்தல் நேரம் மட்டுமல்ல; எப்போதும் மக்களுடன் இனணந்திருக்கும் பேரியக்கம்தான் தி.மு.க. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கொரோனா பேரிடரால் தவித்த மக்களுக்கு உதவிடும் வகையில் ஒன்றிணைவோம் வா எனும் செயல்பாட்டின் மூலம், கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கான உணவு-மருத்துவ உதவி-அத்தியாவசிய தேவைகளை தி.மு.க. நிறைவேற்றியது.
தி.மு.க. தொண்டர்கள் உள்பட அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் அதில் பங்கேற்று தொண்டாற்றினர். இந்த கோடை காலத்தில் மக்களின் தாகம் தணிக்க தி.மு.க.வின் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைத்திடுங்கள். கொரோனா இரண்டாவது அலை குறித்து மருத்துவர்களும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் எச்சரிக்கை செய்திருப்பதால் அதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துங்கள்.
கபசுர குடிநீர்
மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குங்கள். வாய்ப்புள்ள இடங்களில் முககவசம், ‘சானிடைசர்’ வழங்கிடுங்கள்.
தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும். எனினும், அதுவரை காத்திருக்காமல் மக்களுக்கான பணியை எப்போதும் போல இப்போதும் தொடர்ந்திட ‘ஒன்றிணைவோம் வாருங்கள் தொண்டர்களே’.
சென்னை அடுத்த தாம்பரம் பகுதியில் வசித்து வந்தவர் ஆனைமுத்து (வயது 96). மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி தலைவரான இவர், நேற்று உடல் நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உயிரிழந்தார்.