மாநில செய்திகள்

நெல்லையில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா 8 தெருக்களுக்கு ‘சீல்’ வைப்பு + "||" + ‘Sealed’ deposit for Corona 8 streets for 13 people in the same family in Nellai

நெல்லையில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா 8 தெருக்களுக்கு ‘சீல்’ வைப்பு

நெல்லையில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா 8 தெருக்களுக்கு ‘சீல்’ வைப்பு
நெல்லையில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், கொரோனா பாதித்த பகுதியில் 8 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது.
நெல்லை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நெல்லை மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நெல்லை மாநகர பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

நெல்லை பேட்டை செந்தமிழ் நகர் பகுதியில் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது. இதையடுத்து அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்கள் 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கிருமி நாசினி தெளிப்பு

இதையடுத்து அந்த குடும்பத்தை சேர்ந்த மேலும் 10 பேருக்கு பேட்டை சுகாதார மையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒரு குழந்தை தவிர 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதை அறிந்த நெல்லை மாநகராட்சி ஆணையாளர் உத்தரவுப்படி சுகாதார பணியாளர்கள், மருத்துவ குழுவினர் நேற்று அங்கு சென்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடு அமைந்திருக்கும் பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவி, கிருமி நாசினி தெளித்தனர். மேலும் அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட பகுதி என பேனர் வைத்தனர்.

8 தெருக்களுக்கு‘சீல்’ வைப்பு

மேலும், அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று, யாருக்காவது காய்ச்சல் அறிகுறி உள்ளதா? தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதுதவிர வீடு, வீடாக சென்று காய்ச்சல் தடுப்பு மருந்துகளும், கபசுர குடிநீரும் வழங்கினர்.

நெல்லையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் ‘சீல்’ வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெருமாள்புரத்தில் 5 தெருக்களுக்கும், பேட்டையில் 2 தெருக்களுக்கும், டவுனில் ஒரு தெருவுக்கும் என மொத்தம் 8 தெருக்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கட்டுப்பாடு திருவிழா, மதக்கூட்டங்களுக்கு தடை
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலியாக தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. திருவிழா, மதக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.
2. 4 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா தொற்று தொடர்ந்து வேகமாக பரவுகிறது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக பரவுகிறது. நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. 2 தவணை தடுப்பூசி போட்ட பிறகும் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு, 2 தவணை தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை வீட்டில் அவர் தனிமைப்படுத்தி கொண்டார்.
4. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், கல்வித்துறை அதிகாரிகளுடன் சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
5. கொரோனா, தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் பணிக்காக 2,715 சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிக நியமனம்
கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் பணிக்காக 2 ஆயிரத்து 715 கூடுதல் சுகாதார ஆய்வாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.