மாநில செய்திகள்

அரக்கோணத்தில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் - இதுவரை 5 பேர் கைது + "||" + 2 youths killed in Arakkonam - 5 arrested so far

அரக்கோணத்தில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் - இதுவரை 5 பேர் கைது

அரக்கோணத்தில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் - இதுவரை 5 பேர் கைது
அரக்கோணத்தில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நேற்று 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜூன் (வயது 20), செப்பேடு பகுதியை சேர்ந்தவர் சூர்யா (25) ஆகிய இரண்டு இளைஞர்கள் கடந்த 7 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். இது குறித்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று அஜித், மதன் என்ற இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று நரேந்தர், நந்தா மற்றும் கார்த்தி ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கொலையாளிகளை கைது செய்ய கோரி, கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் காவல்துறையினர் 2 நாட்களாக தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி கொலையாளிகளை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

1. அரக்கோணத்தில் பட்டப்பகலில் துணிகரம்: அ.ம.மு.க.பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2½ லட்சம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
அரக்கோணத்தில் பட்டப்பகலில் அ.ம.மு.க.பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.2½ லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற துணிகரம் நடந்துள்ளது.