மாநில செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை எனில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் -தமிழக அரசு எச்சரிக்கை + "||" + If the restrictions do not work, a night curfew will be imposed: Tamil Nadu government warns

கொரோனா கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை எனில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் -தமிழக அரசு எச்சரிக்கை

கொரோனா கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை எனில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் -தமிழக அரசு எச்சரிக்கை
கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று தமிழ அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. 

பேருந்துகளில் இருக்கைகளில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கே அனுமதி என்பன போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  நாளை முதல் தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 

அதில் கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றாவிடில் இரவு நேர ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.  தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பலன் தரவில்லை என்றால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 16-வரை தடுப்பூசி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகுதி வாந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு பலியானவரின் உடலை அடக்கம் செய்ய தயங்கிய உறவினர்கள்; கவச உடை அணிந்து குழியில் புதைத்த பொன்னேரி ஊராட்சி மன்ற தலைவர்
பொன்னேரி அருகே உள்ள திருவேங்கடாபுரத்தை சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் இறந்தார்.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.95 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13.82 கோடியாக அதிகரித்துள்ளது.
3. உத்தரபிரதேசம்: கிராமங்களில் கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும் - மாயாவதி வலியுறுத்தல்
உத்தரபிரதேச மாநிலத்தின் கிராமங்களில் கொரோனா பரவுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
4. தேசம் மூச்சுவிட திணறும்போது மாற்று யதார்த்தம் குறித்து பேசுகிறார்; மத்திய மந்திரி மீது சசி தரூர் குற்றச்சாட்டு
இந்தியா கொரோனா வைரசின் பிடியில் சிக்கி, மூச்சு விட திணறும்போது, மாற்று யதார்த்தம் குறித்து மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் பேசுவதாக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சாடியுள்ளார்.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.89 கோடியாக உயர்ந்துள்ளது.