காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் உடல் ஸ்ரீவில்லிபுத்தூரில் நல்லடக்கம்


காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் உடல் ஸ்ரீவில்லிபுத்தூரில்  நல்லடக்கம்
x
தினத்தந்தி 12 April 2021 11:06 AM GMT (Updated: 12 April 2021 11:06 AM GMT)

காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் உடல் அவரது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.


விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக மாதவராவ் (வயது 63) போட்டியிட்டார்.கடந்த மாதம் (மார்ச்) 17-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த மாதவராவ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து அவருக்கு மதுரை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருடைய மகள் திவ்யா மாதவராவ் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாதவராவுக்கு, நுரையீரல் தொற்று பாதிப்பும் ஏற்பட்டது. எனவே அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வந்தனர். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.இந்தநிலையில் மாதவராவ் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று காலை 7.55 மணிக்கு மாதவராவ் பரிதாபமாக மரணம் அடைந்தார். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த சோகம் அடைந்தனர்.

மரணம் அடைந்த மாதவராவின் உடல் மதுரையில் இருந்து ஆம்புலன்சு மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு வரப்பட்டது.அங்கு காதி போர்டு காலனியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.  இதையடுத்து மாதவராவின் உடல் அவரது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

Next Story