மாநில செய்திகள்

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குணமடைந்தார் + "||" + DMK general secretary Duraimurugan, who was treated for corona infection, has recovered

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குணமடைந்தார்

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குணமடைந்தார்
சென்னையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குணமடைந்து வீடு திரும்பினார்.
சென்னை,

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்த அவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துரைமுருகனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் தினமும் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் துரைமுருகன், சிகிச்சைக்குப் பின்னர் இன்று குணமடைந்தார். இதனால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள்: கொரோனா நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் திணறும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி
கொரோனா நோயாளிகளை அனுமதிக்க முடியாமல் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி திணறி வருகிறது. ஆம்புலன்ஸ் வாகனங்கள் நோயாளிகளுடன் சாலையில் வரிசைகட்டி நிற்கின்றன. 5 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருக்க நேர்வதால் நோயாளிகளின் உறவினர்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.
2. கொரோனா 2-வது அலையால் வெறிச்சோடியது: சென்னை விமான நிலையத்தில் 78 விமான சேவைகள் மட்டுமே இயங்கின
கொரோனா 2-வது அலை பரவலால் சென்னை உள்விமான நிலையத்தில் 78 விமான சேவைகள் மட்டுமே இயங்கியது. பயணிகள் வரத்து குறைவால் வெறிச்சோடியது.
3. பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 300 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் ஆஸ்பத்திரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது
பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 300 ஆக்சிஜன் செறிவூட்டிகளை மாநகராட்சி கமிஷனரிடம், முதல்-அமைச்சர் வழங்கினார். இதையடுத்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அந்த கருவிகள் பிரித்து அனுப்பப்பட்டது.
4. சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்களை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை
சென்னையில் கொரோனா பாதுகாப்பு மையங்களை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் தகவல்.
5. 140 படுக்கை வசதிகளுடன் சென்னை மீனம்பாக்கத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்
சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் 140 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட சித்தா, அலோபதி கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.