மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் + "||" + Chance of thundershowers in 10 districts in Tamil Nadu for the next 3 hours Meteorological Center

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

கடும் வெயிலுக்கு மத்தியில் தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இவ்வாறு சில இடங்களில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (வியாழக்கிழமை) பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இன்று (ஏப்.15) அதிகாலை முதலே பலத்த மழை பெய்தது.

சென்னை கோயம்பேடு, அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், சென்ட்ரல், தியாகராய நகர், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், அசோக் நகர், கே.கே. நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளில் மழை பெய்தது. மேலும் புறநகர் பகுதிகளான வண்டலூர், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட இடங்களிலும் பர்வலாக மழை பெய்தது.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைவு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் அமலுக்கு வந்தது இ-பதிவு நடைமுறை: போலீசார் தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் இ-பதிவு நடைமுறை அமலுக்கு வந்ததுள்ளநிலையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
3. இன்று முதல் ‘இ-பதிவு' முறை கட்டாயம்: பதிவு செய்வது எப்படி?
மாவட்டங்களுக்கு உள்ளே, வெளியே அவசர பயணத்துக்கு தமிழகத்தில் இன்று முதல் ‘இ-பதிவு' முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் மே 18ம் தேதி முதல் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விநியோகம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.