மாநில செய்திகள்

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: தமிழகத்தில் இரவு ஊரடங்கு-வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கொண்டுவரப்படுமா? + "||" + Possibility to bring night curfew or full curfew on weekends in Tamil Nadu

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: தமிழகத்தில் இரவு ஊரடங்கு-வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கொண்டுவரப்படுமா?

கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா: தமிழகத்தில் இரவு ஊரடங்கு-வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு  கொண்டுவரப்படுமா?
தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு, இரவு நேரத்தில் ஊரடங்கு கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
சென்னை

மராட்டியம், உத்தரபிரதேசம், சத்தீஷ்கார் கர்நாடகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக பலர் உயிரிழக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி அதிகபட்சமாக 6,993 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வரை இதுதான் ஒரு நாளில் ஏற்பட்ட அதிகபட்ச தொற்று எண்ணிக்கையாக பதிவாகி இருந்தது.

ஆனால் இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து 7,819 ஆக உயர்ந்திருக்கிறது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 2,564 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இது மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 10 சதவீத வளர்ச்சியில் கொரோனா பரவல் உள்ளது.

மேலும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றில் பதில் அளித்த தமிழக அரசு, கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளதாக தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்புக்காக சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து உள்ளது.

திருமணம், இறுதிச்சடங்கு, மதம் தொடர்பான கூட்டங்கள் உள்பட பல நிலைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மக்களுக்கு தடுப்பூசி போடுவதிலும் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் தலைமைச்செயலகத்தில் இன்று  தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார துறை இணை இயக்குனர் செல்வ விநாயகம், வருவாய் துறை அதிகாரிகள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மேலும் பல அவசர நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்போடு மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்படுகிறது.

மைக்ரோ கட்டுப்பாட்டு பகுதிகள் அமைத்து துல்லியமாக கண்காணிக்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் பாதிக்காத வகையில் என்னென்ன கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம் என்று விவாதிக்கப்பட்டது.

வார இறுதியில் ஊரடங்கு, இரவு நேரத்தில் ஊரடங்கு கொண்டுவருவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பொது ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது போல் இல்லாமல் சிறிய அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்படுகிறது.

மேலும் பாதிப்பு அதிகம் உள்ள 19 மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த வகையிலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் எனவும் விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை தள்ளி வைக்கலாமா? அல்லது திட்டமிட்டபடி நடத்துவதா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நேற்று நடந்த கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசித்தனர். இதில் பிளஸ்-2 தேர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா 3வது அலை தாக்கும் முன் தயாராகுங்கள்; ஆக்சிஜன், தடுப்பூசிக்கு உடனடி நடவடிக்கை தேவை - சென்னை ஐகோர்ட்
தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
2. இஸ்ரோ விலை குறைந்த 3 வென்டிலேட்டர்கள் - ஆக்சிஜன் செறிவுகளை உருவாக்கி உள்ளது
இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் விலை குறைந்த 3 வென்டிலேட்டர்கள் - ஆக்சிஜன் செறிவுகளை உருவாக்கி உள்ளது.
3. மாமல்லபுரத்தில் திருட்டை தவிர்க்க டாஸ்மாக் கடைகளுக்கு ‘சீல்’
மர்ம நபர்கள் மூலம் மதுபாட்டில்கள் திருடு போகாத வகையில் மாமல்லபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு இரும்பு கம்பி மூலம் வெல்டு வைத்து சீல் வைக்கப்பட்டது.
4. இன்று முதல் முழு ஊரடங்கு மதுக்கடையில் குவிந்த மது பிரியர்கள்
இன்று முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் நேற்று மதுக்கடையில் மது பிரியர்கள் குவிந்தனர்.
5. கொரோனா தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
கொரோனா தடுப்பூசி கொள்கையில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.