ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள்: தடைகோரிய தீபாவின் மனு தள்ளுபடி


ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள்: தடைகோரிய தீபாவின் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 16 April 2021 2:58 PM GMT (Updated: 16 April 2021 2:58 PM GMT)

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் தமிழில் ‘தலைவி’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ஜெயா’ என்ற பெயரில் ஐதராபாத்தை சேர்ந்த விஷ்ணுவர்தன் இந்தூரி ஆகியோர் திரைப்படமாக எடுத்து வருகின்றனர்.

இதேபோல, ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் ‘குயின்’ என்ற இணையதள தொடரை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் எடுத்துள்ளார்.இதற்கிடையே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கும், இணையதள தொடருக்கும் தடை விதிக்க கோரி ஜெ.தீபா, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்திருந்த நிலையில் ‘தலைவி’, ‘குயின்’, ‘ஜெயா’ படங்கள் வெளியாக தடை விதிக்க முடியாது என கூறி ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story