தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடா? - 5 லட்சம் டோஸ்களுக்கு குறைவான தடுப்பூசிகளே கையிருப்பு என தகவல்


தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடா? - 5 லட்சம் டோஸ்களுக்கு குறைவான தடுப்பூசிகளே கையிருப்பு என தகவல்
x
தினத்தந்தி 18 April 2021 7:06 AM GMT (Updated: 18 April 2021 7:06 AM GMT)

தமிழகத்தில் 5 லட்சம் டோஸ்களுக்கு குறைவான தடுப்பூசிகளே கையிருப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் 5 லட்சம் டோஸ்களுக்கு குறைவான தடுப்பூசிகளே கையிருப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி ஒரு நாளில் ஒரு லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் என்பதால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி போட வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “மத்திய அரசிடம் இருந்து இதுவரை 55.85 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. 47.05 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன். 8.80 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது” என்று தெரிவித்திருந்தார். 

மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கொரோனா தடுப்பு பணிகளை செய்ய இயலவில்லை. ஆய்வு பணி மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்‌ஷவர்த்தனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது தமிழகத்தின் நிலையை எடுத்துக்கூறியதுடன், தடுப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்து தமிழகத்தில் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து வழங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். மேலும், முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டுநெறிமுறைகளில்  கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் இருந்தால் வரும் காலங்களில் மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்” என்று அவர் தெரிவித்தார். 

Next Story