மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குவியும் வட மாநில தொழிலாளர்கள் + "||" + Northern state workers pile up at Chennai Central railway station

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குவியும் வட மாநில தொழிலாளர்கள்

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குவியும்  வட மாநில தொழிலாளர்கள்
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குவியும் வட மாநில தொழிலாளர்கள். ரெயிலுக்காக காத்து இருக்கிறார்கள்.
சென்னை

தமிழகத்தில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.

உத்தரபிரதேசம், பீகார், ஒடிசா, மேற்குவங்காளம், அசாம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து தான் பெருவாரியான தொழிலாளர்கள் வருகிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர ஓட்டல்கள், மால்கள், தங்கும் விடுதிகள், உள்அலங்கார வேலைகள், டெய்லரிங் என்று வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்க்காத இடங்களே இல்லை என்று சொல்லும் வகையில் தமிழகம் முழுவதும் அவர்கள் வேலை பார்க்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அவ்வாறு கிடைத்தாலும் சம்பளம் அதிகம், குறித்த நேரம் மட்டுமே வேலை பார்ப்பார்கள் என்ற எண்ணம் உள்ளது.

வட மாநில தொழிலாளர்களை பொறுத்தவரை சம்பளம் 25 சதவீதம் வரை குறைவாக உள்ளது. அதிகம் நேரம் வேலை பார்க்கிறார்கள். தங்குவதற்கு இடம் கொடுத்தால் போதும் தடங்கல் இல்லாமல் வேலை நடக்கும். குறிப்பிட்ட காலத்துக்குள் வேலை முடிந்து விடும் என்பதால் வடமாநில தொழிலாளர்களை விரும்புகிறார்கள்.

கடந்த ஆண்டு ஊரடங்கு அமலுக்கு வந்தபாது இவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். பலர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடினார்கள். நடந்தே ஊர்களுக்கு புறப்பட்ட சம்பவங்களும் நடந்தது.

அப்போது  கட்டுமான தொழில்கள்  கடுமையாக பாதித்தது. ஊரடங்கை தளர்த்திய பிறகும் பலர் திரும்பி வராததால் எல்லா தொழில்களும் முடங்கியது.

அதன் பிறகு வட மாநிலங்களில் இருந்து தனி பஸ்கள் மூலம் அவர்களை அழைத்து வந்தார்கள். இதனால் மீண்டும் தொழில்கள் வேகமாக நடந்தன.

இப்போது மீண்டும் கொரோனா கட்டுப்பாடு மற்றும் அதிகமாக பரவி வரும் கொரோனா காரணமாக வட மாநில தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளார்கள்.

கூட்டம் கூட்டமாக ஊருக்கு படையெடுக்கிறார்கள். சென்னை சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் நிரம்பி வழிகின்றன. ரெயிலுக்காக ஏராளமானவர்கள் ரெயில் நிலையங்களில் காத்து இருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பீகார்: கங்கை நதியில் மிதந்து வந்த 71 உடல்கள்: கொரோனாவால் உயிரிழந்தவர்களா?
பீகாரில் கங்கை நதியில் நதியில் மிதந்து வந்த பல உடல்கள் உரிய மரியாதையுடன் புதைக்கப்பட்டன
2. உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் : உலக சுகாதார நிறுவனம்
உருமாறும் கொரோனாவால் தடுப்பூசிகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது.
3. அதிகரிக்கும் கொரோனா: தெலங்கானாவில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு!
அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் தெலங்கானாவில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது
4. கொரோனா பாதிப்பு: டுவிட்டர் இந்தியாவுக்கு ரூ. 110 கோடி நிதியுதவி
கொரோனா தடுப்புப் பணிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பல அமைப்புகள், நிறுவனங்கள், தன்னார்வலர்கள் நிதியுதவி அளித்து வருகின்றன.
5. இந்தியாவில் பரவிவரும் உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிக்கிறது- உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் பரவிவரும் பி-1617 வகை உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிப்பதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.