நீலகிரி மாவட்டத்துக்கு இன்று முதல் சுற்றுலா பயணிகள் வர தடை

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று முதல் சுற்றுலா பயணிகள் வர தடை
x
தினத்தந்தி 19 April 2021 10:05 PM GMT (Updated: 19 April 2021 10:05 PM GMT)

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்படுகிறது. அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகின்றன.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்படுகிறது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேட்டியின்போது கூறினார். நீலகிரி  கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்படுகிறது. அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுகின்றன.

எனவே சுற்றுலா நோக்கில் வெளியிடங்களில் இருந்து நீலகிரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மாவட்ட எல்லைகள் மூடப்படாது. வணிகம், தொழில் ரீதியாக வந்து செல்லலாம். இ-பதிவு முறை தொடரும். தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் செயல்படலாம். இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். அந்த நேரத்தில் போக்குவரத்தை தவிர்க்க வேண்டும். சரக்கு வாகனங்களை வழக்கம்போல் இயக்கலாம். சுற்றுலாவை தவிர மற்ற காரணங்களுக்காக நீலகிரிக்கு வந்து செல்ல தடை இல்லை.  ஊட்டியில் கோடை விழா நடத்துவது குறித்து தமிழக அரசு முடிவு செய்யும்” என்றார். 

Next Story