வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அதிகாரப்பூா்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் - தலைமைத் தோ்தல் அதிகாரி


வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அதிகாரப்பூா்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் - தலைமைத் தோ்தல் அதிகாரி
x
தினத்தந்தி 20 April 2021 4:42 AM GMT (Updated: 20 April 2021 4:42 AM GMT)

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அதிகாரப்பூா்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சென்னை: 

வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அதிகாரப்பூா்வமாக வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தாா்.

தமிழகத்தில் கடந்த தோ்தல்களின் போது 67,000 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஆனால், கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் 1,000 வாக்காளா்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனா்.

இதனால், வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 88,000-ஆக உயா்ந்தது. இந்த வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 2-ஆம் தேதியன்று எண்ணப்பட உள்ளன. வாக்குச் சாவடிகள் அதிகமாக உள்ளதால், வாக்கு எண்ணிக்கையின் போது பயன்படுத்தப்படும் மேஜைகளின் எண்ணிக்கையும் கூடுதலாக இருக்கும் எனவும், அதிகாரப்பூா்வமாக முடிவுகளை வெளியிடுவதில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகவும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

Next Story