மாநில செய்திகள்

ஊரடங்கு காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் இரவு 10 மணி வரை மட்டுமே இயக்கப்படும் + "||" + Due to the curfew, the change in the electric train service will be operated only till 10 pm

ஊரடங்கு காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் இரவு 10 மணி வரை மட்டுமே இயக்கப்படும்

ஊரடங்கு காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் இரவு 10 மணி வரை மட்டுமே இயக்கப்படும்
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக, மின்சார ரெயில் சேவையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இரவு 10 மணி வரை மட்டுமே மின்சார ரெயில்கள் இயக்கப்படும்.
சென்னை, 

மூர்மார்க்கெட்-அரக்கோணம் மார்க்கத்தில் காலை 4.45 மணி முதல் இரவு 10 மணி வரை 150 மின்சார ரெயில் சேவைகளும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை மார்க்கத்தில் காலை 5.45 மணி முதல் இரவு 8.40 மணி வரை 64 மின்சார ரெயில் சேவைகளும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் காலை 6 மணி முதல் இரவு 8.40 மணி வரை 68 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்படுகிறது.

இதேபோல், சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் திருமால்பூர் மார்க்கத்தில் காலை 4.55 மணி முதல் இரவு 10 மணி வரை 152 மின்சார ரெயில் சேவைகளும் என இன்று முதல் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மொத்தம் 434 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில்...

மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின்போது, அத்தியாவசிய பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்காக 86 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது. அதன்படி மூர்மார்க்கெட்-அரக்கோணம் மார்க்கத்தில் காலை 4.45 மணி முதல் இரவு 9.10 மணி வரை 32 மின்சார ரெயில் சேவைகளும், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர்பேட்டை மார்க்கத்தில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 24 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்படுகிறது.

அதேபோல், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் காலை 5.15 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மின்சார ரெயில் சேவைகளும், சென்னை கடற்கரை-தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் திருமால்பூர் மார்க்கத்தில் காலை 5 மணி முதல் இரவு 9.15 மணி வரை 18 மின்சார ரெயில் சேவைகளும் என ஞாயிற்றுக்கிழமை மட்டும் 86 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி: கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் போக்குவரத்து மாற்றம்
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணி காரணமாக கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நாளை முதல் ஒரு வருடத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
2. பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
3. பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
4. மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட பணியில் 38 லட்சம் டன் மணல் அப்புறப்படுத்த திட்டம்
சென்னையில் தொடங்கி உள்ள மெட்ரோ ரெயில் சேவைக்கான 2-ம் கட்ட பணியின்போது சேரும் 38 லட்சம் டன் மணல் மற்றும் குப்பை களை 1 லட்சத்து 51 ஆயிரம் டிப்பர் லாரி நடைகள் மூலம் அப்புறப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் திட்டத்தை நிறைவேற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
5. 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் தொடக்கம்: சென்னையில் 6 மேம்பாலங்களுக்கு மேல் உயர்மட்ட பாதை அமைக்க திட்டம்
சென்னையில் தொடங்கி உள்ள மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான 2-ம் கட்ட பணியில் மாநகர பகுதியில் உள்ள 6 மேம்பாலங்களின் மேல் மெட்ரோ ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வருகிற 2026-ம் ஆண்டு ரெயில் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.