தேர்தலில் அவதூறு பிரசாரம் எடப்பாடி பழனிசாமியிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு தி.மு.க. நிர்வாகி வழக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்


தேர்தலில் அவதூறு பிரசாரம் எடப்பாடி பழனிசாமியிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு தி.மு.க. நிர்வாகி வழக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 22 April 2021 7:26 PM GMT (Updated: 22 April 2021 7:26 PM GMT)

ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு தி.மு.க., நிர்வாகி தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னையில் இருந்து கோவைக்கு கடந்த ஆண்டு மார்ச் 19-ந்தேதி ரெயிலில் பயணம் செய்தேன். நீரிழிவு பிரச்சினை இருப்பதால் மேல்படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்து விட்டேன். அப்போது அந்த பெண்ணிடம் தெரியாமல் விழுந்ததையும், என்னுடைய உடல் நலம் குறித்தும் விளக்கி கூறினேன். ஆனால் 15 நாட்களுக்கு பிறகு இந்த சம்பவம் குறித்து என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நஷ்ட ஈடு

இதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, என் மீதான அந்த வழக்கை ரத்து செய்துவிட்டது.

இந்த நிலையில், ரெயில் பயணத்தின்பொழுது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சட்டமன்ற தேர்தல் பிரசாரங்களில் என்னை பற்றி அவதூறாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். இவ்வாறு தேர்தலின்போது பேச தடை விதிக்க வேண்டும். அவதூறாக பேசிய முதல்-அமைச்சர், எனக்கு ரூ.1 கோடியை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இதேபோல, அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகவும் ராஜேந்திரன் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த 2 வழக்குகளும் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

நோட்டீஸ்

அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மட்டும் நீதிபதி வி.பார்த்திபன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கிற்கு பதில் அளிக்கும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வருகிற ஜூன் 10-ந்தேதிதள்ளிவைத்தார்.

Next Story