சென்னையில் 2-வது நாள் ஊரடங்கில் 30 வாகனங்கள் பறிமுதல்


சென்னையில் 2-வது நாள் ஊரடங்கில் 30 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 April 2021 10:47 PM GMT (Updated: 22 April 2021 10:47 PM GMT)

சென்னையில் 2-வது நாள் ஊரடங்கின் போது 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை,  

சென்னை காவல்துறையில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. உளவுப்பிரிவு உதவி கமிஷனர் மணி உள்பட 5 உதவி கமிஷனர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். நேற்று உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரவி கொரோனாவால் தாக்கப்பட்டார். 2-வது அலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

தினமும் சென்னை காவல்துறை சார்பில் 200 கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தற்போது இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.

30 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் நேற்று முன்தினம் 2-வது நாள் ஊரடங்கின் போது தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றியவர்கள் மீது 30 வழக்குகள் போடப்பட்டது. 30 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் கடந்த 8-ந்தேதியில் இருந்து இதுவரை முககவசம் அணியாத குற்றத்திற்காக 15 ஆயிரத்து 846 வழக்குகள் போடப்பட்டு, 30.20 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 88 ஆயிரத்து 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story