கிருஷ்ணகிரி கோர்ட்டில் பரபரப்பு: துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை


கிருஷ்ணகிரி கோர்ட்டில் பரபரப்பு: துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை
x
தினத்தந்தி 23 April 2021 12:17 AM GMT (Updated: 23 April 2021 12:17 AM GMT)

கிருஷ்ணகிரி கோர்ட்டு வளாகத்தில், நீதிபதியின் பாதுகாவலரான போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, 

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழுக்கள் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கூடுதல் குழுக்கள் அமைப்பு

இதுதொடர்பாக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேலாண்மை செய்வதற்காக ஒருங்கிணைப்பு குழுக்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. ஏற்கனவே உள்ள 8 குழுக்களுடன் மேலும் 3 குழுக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்திற்குள் இடம் மாறிச்சென்றுள்ள தொழிலாளர்கள், வெளிமாநிலங்களில் இருக்கும் தமிழக தொழிலாளர்கள், தமிழகத்தில் உள்ள வெளிமாநில மாணவர்கள், மற்ற மாநிலங்களில் இருக்கும் தமிழக மாணவர்கள் ஆகியோரின் நலனுக்காக, கூடுதல் தலைமைச்செயலாளர் (தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை) நிஜாமுத்தீன் (044-25670472, labsec@tn.gov.in), முதன்மைச் செயலாளர் (உயர் கல்வித் துறை) அபூர்வா (044-25676303), கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ஏ.கே.விஸ்வநாதன் (044-24343460), கோஆப் டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் மைதிலி ராஜேந்திரன் (044-25671545) ஆகியோர் அடங்கிய குழுவும்;

மூத்த குடிமக்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் தேவைகளை நிறைவேற்ற, கூடுதல் தலைமைச் செயலாளர் (திட்டம் மற்றும் மேம்பாட்டுத் துறை) ஜெயஸ்ரீ ரகுநந்தன் (044-25674310, plansec@tn.gov.in), மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் சி.விஜயராஜ்குமார் (044-25676303), சமூகநலத்துறை செயலாளர் எஸ்.மதுமதி (044-25671545) ஆகியோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பதற்காக சிப்காட் மேலாண்மை இயக்குனர் ஜெ.குமரகுருபரன் (044-25671300), செய்தித்துறை இயக்குனர் டி.பாஸ்கரபாண்டியன் (dipr@tn.gov.in), தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கழக திட்ட இயக்குனர் தீபக் ஜேக்கப் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களுடன்...

மத்திய அரசு மற்றும் வெளி மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக, கூடுதல் தலைமைச் செயலாளர் (வருவாய்த்துறை) அதுல்ய மிஸ்ரா (044-25671764, pubsec@tn.gov.in), நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன், பொதுத்துறை முதன்மைச்செயலாளர் பி.செந்தில்குமார்,

டான்ஜெட்கோ தலைவர் பங்கஜ்குமார் பன்சால், மின் ஆளுமை ஆணையர் சந்தோஷ் மிஸ்ரா மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.திருநாவுக்கரசு; தொற்று, தடுப்பூசி கண்காணிப்பு ஒருங்கிணைப்பிற்காக, பால்வளம், மீன்வளத்துறை முதன்மைச்செயலாளர் கே.கோபால் (044-25672937, pdtnhsp@gmail.com), பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மைச்செயலாளர் பி.சந்திரமோகன், தமிழ்நாடு சுகாதார திட்டங்கள் இயக்குனர் ஏ.சிவஞானம், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் இயக்குனர் டி.எஸ்.செல்வவிநாயகம்;

தொற்று தடம் அறிதல்

கொரோனா தொற்று தடம் அறிதல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை ஒருங்கிணைக்க, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக மேலாண்மை இயக்குனர் பி.உமாநாத் (044-28191891, enquiry.tnmsc@tn.gov.in), வனிகவரிகள் முதன்மைச்செயலாளர் எம்.ஏ.சித்திக், பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜெகநாதன், ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.திருநாவுக்கரசு;

சுகாதார உள்கட்டமைப்பு, கொரோனா சிகிச்சை மையங்கள் ஒருங்கிணைப்பிற்காக, பொதுப்பணித்துறை முதன்மைச்செயலாளர் கே.மணிவாசன் (044-25671622), நெடுஞ்சாலைத்துறை முதன்மைச்செயலாளர் ஏ.கார்த்திக், வீட்டுவசதித்துறை முதன்மைச் செயலாளர் டி.கார்த்திகேயன், மருத்துவ சேவைகள் இயக்குனர் எஸ்.குருநாதன், மருத்துவக் கல்வி இயக்குனர் ஆர்.நாராயணபாபு;

அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பு

அத்தியாவசிய பொருட்கள் தயாரிப்பு மற்றும் உள்மாநிலம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பணிகளை ஒருங்கிணைக்க, தொழில்துறை முதன்மைச்செயலாளர் என்.முருகானந்தம் (044-25671383), சிறப்புச்செயலாளர் வி.அருண்ராய், தொழில்கள் ஆணையர் அனு ஜார்ஜ், சிப்காட் செயல் இயக்குனர் எஸ்.அனீஸ் சேகர்;

அத்தியாவசிய பொருட்கள் வினியோக பணிகளை ஒருங்கிணைக்க, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தயானந்த் கட்டாரியா (044-25674482), வேளாண்மை உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, ஐ.பி.எஸ். அதிகாரி தாமரை கண்ணன்;

போக்குவரத்து ஒருங்கிணைப்பிற்காக, உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர் (044-28520682), போக்குவரத்து ஆணையர் டி.எஸ்.ஜவஹர், போக்குவரத்துத் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி;

நிவாரணம்

நிவாரணம், தன்னார்வ குழுக்கள் ஒருங்கிணைப்பு பணிகளுக்காக, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கிருஷ்ணன் (044-25671173), வருவாய் நிர்வாக ஆணையர் கே.பணீந்திர ரெட்டி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச்செயலாளர் தீரஜ்குமார், சர்வே மற்றும் நில ஆவணங்கள் கூடுதல் இயக்குனர் வி.பி.ஜெயசீலன் ஆகியோரை கொண்ட குழுக்களாக மாற்றி அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story