இரவு நேர ஊரடங்கில் சரக்கு வாகனங்கள் தடையின்றி செல்ல அனுமதிக்க வேண்டும்


இரவு நேர ஊரடங்கில் சரக்கு வாகனங்கள் தடையின்றி செல்ல அனுமதிக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 April 2021 8:21 PM GMT (Updated: 23 April 2021 8:21 PM GMT)

இரவு நேர ஊரடங்கில் சரக்கு வாகனங்கள் தடையின்றி செல்ல அனுமதிக்க வேண்டும் மணல் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்.

சென்னை, 

தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.யுவராஜ், தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு பிறப்பித்துள்ள இரவு நேர ஊரடங்கால் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு தடை ஏற்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களால் கொரோனா நோய் தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அதுபோன்ற வாகனங்களில் அதிகபட்சம் 2 பேருக்கு மேல் பயணிக்க மாட்டார்கள்.

சரக்கு வாகனங்களை பொறுத்தமட்டில் இரவு 10 மணிக்கு மேல் தான் சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

இரவு நேர ஊரடங்கால் சரக்கு வாகனங்கள் நகருக்குள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை குறைவான அளவிலேயே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இரவு நேர ஊரடங்கால் சரக்கு வாகனங்கள் இயக்கம் குறைந்து கட்டுமான பணியில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, இரவு நேர ஊரடங்கின் போது எந்தவித தடையும் இன்றி சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story