ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்


ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 April 2021 9:23 PM GMT (Updated: 23 April 2021 9:23 PM GMT)

ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் விஜயகாந்த் வலியுறுத்தல்.

சென்னை, 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்கு பயன் பெறும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவருவது வேதனை அளிக்கிறது. தடுப்பூசிகளை இலவசமாக செலுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, கொரோனா இல்லா இந்தியாவை உருவாக்குவதில் முனைப்பு காட்ட வேண்டும்.

ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் தடுப்பூசி பற்றாக்குறையை போக்க, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை நீக்குவது அரசின் கடமை. கொரோனா தொற்று அதி தீவிரமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு, பொதுமக்களும், மத்திய, மாநில அரசுகளுடன் ஒன்றிணைந்து, கொரோனாவே இல்லாத இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story