சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. மேல்முறையீடு ஐகோர்ட்டு நோட்டீஸ்


சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. மேல்முறையீடு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. மேல்முறையீடு ஐகோர்ட்டு நோட்டீஸ்.

சென்னை, 

சின்னசேலம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக 1991-1996-ம் ஆண்டுகளில் பதவி வகித்தவர் பரமசிவம். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு, கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு அளித்தது. அதில், பரமசிவத்தை குற்றவாளி என்று அறிவித்து, அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.33 லட்சம் அபராதமும் விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பரமசிவம் மேல்முறையீடு செய்தார். அதில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், ஜாமீன் வழங்கவேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், மனுவுக்கு 29-ந் தேதிக்குள் பதில் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Next Story