ஆக்சிஜன் மருத்துவ உபகரணங்கள் இறக்குமதிக்கு வரி விலக்கு: எல்.முருகன் வரவேற்பு


ஆக்சிஜன் மருத்துவ உபகரணங்கள் இறக்குமதிக்கு வரி விலக்கு: எல்.முருகன் வரவேற்பு
x
தினத்தந்தி 25 April 2021 3:46 AM GMT (Updated: 25 April 2021 3:46 AM GMT)

ஆக்சிஜன் மருத்துவ உபகரணங்கள் இறக்குமதிக்கு வரி விலக்கு: எல்.முருகன் வரவேற்பு.

சென்னை, 

பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபடுவதற்கும் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதற்கும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. அனைத்து மாநில அரசுகளுக்கும் போதுமான தடுப்பூசிகள் ஆக்சிஜன் தேவைகள் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இத்தகைய நிலையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு கூட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன் மருத்துவ உபகரணங்கள் இறக்குமதிக்கு முழுமையான வரி விலக்கு அளிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தடுப்பூசி உற்பத்தியும் ஆக்சிஜன் உற்பத்தியும் மிக மிக அதிக அளவில் இலக்கை எட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம் நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவினை வரவேற்று நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story