தேசிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை


தேசிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை
x
தினத்தந்தி 26 April 2021 2:08 AM GMT (Updated: 26 April 2021 2:08 AM GMT)

தேசிய கல்வி கொள்கைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை.

சென்னை, 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஏழை, எளிய மாணவர்களின் கல்வியைப் பறிக்கும் வகையிலும், மாநில அரசின் கல்வி உரிமைகளை பறித்து, கல்வியை முற்றிலும் வணிகமயமாக்கி கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்க்கும் தேசிய கல்விக் கொள்கையை 17 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் தமிழ்மொழியில் வெளியிடப்படவில்லை.

தேசிய கல்விக் கொள்கையை, தமிழ் மொழியில் மொழி பெயர்ப்பு செய்யாதது தமிழ் மொழியையும், தமிழக மக்களையும் புறக்கணிக்கும் செயலாகும். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிப்பதுடன், தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து உறுதியுடன் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ‘ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து ஆக்சிஜன் திருப்பிவிடுவதை எதிர்த்துள்ள முதல்-அமைச்சர், தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் அபாயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தமிழக அரசிடமிருந்து கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பிராண வாயுவை திருப்பி விடக் கூடாது, கூடுதலாக பிராண வாயுவை உடனடியாக வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

Next Story