மாநில செய்திகள்

வார நாட்களில் கூடுதலாக 21 மின்சார ரெயில்கள் இயக்கம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு + "||" + Chennai Railway Division has announced the operation of an additional 21 electric trains on weekdays

வார நாட்களில் கூடுதலாக 21 மின்சார ரெயில்கள் இயக்கம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு

வார நாட்களில் கூடுதலாக 21 மின்சார ரெயில்கள் இயக்கம் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
கொரோனா பரவல் எதிரொலியால் ஏற்கனவே சென்னையில் குறைந்த அளவிலான மின்சார ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதற்கான புதிய கால அட்டவணையும் சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டது.
சென்னை, 

கொரோனா பரவல் எதிரொலியால் ஏற்கனவே சென்னையில் குறைந்த அளவிலான மின்சார ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அதற்கான புதிய கால அட்டவணையும் சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டது. அந்தவகையில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வேலை நாட்களில் 459 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேரத்தில் மேலும் குறைவான ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இந்தநிலையில் தற்போது இன்று (திங்கட்கிழமை) முதல் வேலை நாட்களில் கூடுதல் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும் என சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஆவடி-திருவள்ளூர், ஆவடி-அரக்கோணம், மூர்மார்க்கெட்-ஆவடி, கடற்கரை-திருவள்ளூர், மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-திருவள்ளூர், அரக்கோணம்-கடற்கரை, திருவள்ளூர்-மூர்மார்க்கெட், ஆவடி-மூர்மார்க்கெட் இடையே தலா ஒரு மின்சார ரெயில் சேவை இயக்கப்படுகிறது.

இதேபோல், கடற்கரை-ஆவடி இடையே 5 மின்சார ரெயில் சேவையும், ஆவடி-கடற்கரை இடையே 3 மின்சார ரெயில் சேவையும், திருவள்ளூர்-கடற்கரை, திருவள்ளூர்-ஆவடி இடையே தலா 2 மின்சார ரெயில் சேவையும் என மொத்தம் கூடுதலாக 21 மின்சார ரெயில் சேவைகள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இன்று முதல் இயக்கப்படுகிறது என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
2. பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
3. மதுரை-செங்கோட்டை, திருச்சி-காரைக்கால் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள்
மதுரை-செங்கோட்டை, திருச்சி-காரைக்கால் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.
4. 5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள்
5 நாட்கள் இயக்கப்படும்: கும்மிடிப்பூண்டி-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு.
5. பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம்
பயணிகளின் வேண்டுகோளை ஏற்று மெட்ரோ ரெயில்கள் காலை 5.30 மணி முதல் இயக்கம் அதிகாரிகள் தகவல்.