மாநில செய்திகள்

வாக்கு எண்ணிக்கை : வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் -தேர்தல் ஆணையம் + "||" + votes Counting To candidates' agents Corona testing is mandatory Election Commission

வாக்கு எண்ணிக்கை : வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் -தேர்தல் ஆணையம்

வாக்கு எண்ணிக்கை : வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம்  -தேர்தல் ஆணையம்
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
சென்னை

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெற உள்ளது.வாக்கு எண்ணிக்கை : வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம்  என தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. 

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  கூறி இருப்பதாவது:-

வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் ஏஜெண்டுகளுக்கு கொரோனா சோதனை கட்டாயம்  வாக்கு எண்ணிக்கை துவங்கும் 72 மணி நேரத்திற்கு முன்னதாக ஏஜென்டுகள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்   அலுவலர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

சராசரியாக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

பதிவான தபால் வாக்குகளை முதலில் 500, 500ஆக பிரித்து பிறகு எண்ணப்படும். குலுக்கள் முறையில் ஒரு தொகுதிக்கு 5 விவிபேட் எந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை சரிபார்க்கப்படும்.

ஏப்ரல் 23ந் தேதி வரை ஐந்து லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் இன்று பதவியேற்பு
தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத 10 புதிய எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
2. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்
தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதப்வீதம் பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்தக் சங்க அறிக்கை கூறி உள்ளது.
3. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் ; தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
4. திமுக, அதிமுக அடுத்து தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்
தமிழக சட்டசபை தேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றது என்று தேர்தல் ஆணையம் விவரங்களை வெளியிட்டுள்ளது.
5. தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடர வேண்டும் -மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து
தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.