கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் விதிப்பு: வாடிக்கையாளர் சேவை மையங்கள் 3 மணி நேரம் மட்டுமே செயல்படும் - பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் அறிவிப்பு


கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் விதிப்பு: வாடிக்கையாளர் சேவை மையங்கள் 3 மணி நேரம் மட்டுமே செயல்படும் - பி.எஸ்.என்.எல். தலைமை பொதுமேலாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 26 April 2021 7:56 PM GMT (Updated: 26 April 2021 7:56 PM GMT)

கொரோனா வேகமாக பரவுதல் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சென்னை, 

இது குறித்து பி.எஸ்.என்.எல். சென்னை வட்ட தலைமை பொதுமேலாளர் வி.கே.சஞ்சீவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்படிருப்பதாவது:-

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவுவதையொட்டி, தமிழக அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதையடுத்து பி.எஸ்.என்.எல். சென்னை வட்டம், இயக்கம் மற்றும் நிர்வாக அலகுகளில் உள்ள பணியாளர்களின் அமைப்பில் சில மாறுதல்களை செய்திருக்கிறது. 

இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி வரை வாடிக்கையாளர் சேவை மையங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே (3 மணி நேரம்) செயல்படும். எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் சேவைகளை பெறுவதற்கு ‘ஆன்லைன்' முறையை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ‘லேண்ட்லைன்', ‘பிராட்பேண்ட்' மற்றும் செல்போன் ‘போஸ்ட்பெய்ட்' கட்டணங்களை எங்களுடைய டிஜிட்டல் தளத்தை பயன்படுத்தி செலுத்தலாம். 

கொரோனா வேகமாக பரவுதல் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலிலும் எங்களது வாடிக்கையாளர்களுக்கு தடை இல்லாத மற்றும் பழுது இல்லாத சேவைகள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

மேற்கண்ட தகவல் பி.எஸ்.என்.எல். சென்னை வட்ட தலைமை பொதுமேலாளர் வி.கே.சஞ்சீவி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story