நடுக்கடலில் மோதியதில் 7 மீனவர்கள் பலி: சிங்கப்பூர் சரக்கு கப்பல் மீது வழக்கு தொடர வேண்டும்


நடுக்கடலில் மோதியதில் 7 மீனவர்கள் பலி: சிங்கப்பூர் சரக்கு கப்பல் மீது வழக்கு தொடர வேண்டும்
x
தினத்தந்தி 27 April 2021 3:14 AM GMT (Updated: 27 April 2021 3:14 AM GMT)

நடுக்கடலில் மோதியதில் 7 மீனவர்கள் பலி: சிங்கப்பூர் சரக்கு கப்பல் மீது வழக்கு தொடர வேண்டும் மத்திய-மாநில அரசுகளுக்கு முத்தரசன் வேண்டுகோள்.

சென்னை, 

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரள மாநிலம் கோழிக்கோடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அரப்பா என்ற மீன்பிடி படகில் கடந்த 11-ந் தேதி தமிழகம், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 14 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி படகு விபத்துள்ளானது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 5 பேர் மீட்கப்படவில்லை. அந்த 5 மீனவர்களை மீட்கும் பணியில் அரசு முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும். மேலும் பலியான குடும்பங்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு தொகை வழங்கவேண்டும். உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதார உதவிகளை அறிவிக்கவேண்டும்.

கடலில் அடிக்கடி நிகழும் நிகழ்வுகளில் திசை மாறிபோகும் மீனவர்களை மீட்டெடுக்கும் வகையில் மீட்புபணிக்காக நவீன கடற்படை ஒன்றை மத்திய அரசு தொடங்கவேண்டும். மேலும் விபத்து நிகழ்த்திய சிங்கப்பூர் கப்பல் மீது வழக்கு தொடர்ந்து, வழக்கு முடியும் வரை கப்பலை மங்களூர் துறைமுகத்தில் நிறுத்திவைக்கவும் மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story