“அழகு நிலையங்களை கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்க வேண்டும்” - தமிழக அரசுக்கு அழகு கலை நிபுணர்கள் கோரிக்கை


“அழகு நிலையங்களை கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதிக்க வேண்டும்” - தமிழக அரசுக்கு அழகு கலை நிபுணர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 April 2021 6:41 AM GMT (Updated: 27 April 2021 6:41 AM GMT)

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அழகு நிலையங்களை கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதியளிக்க வேண்டும் என அழகு கலை நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கொரொனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. நேற்றைய தினம் தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்தது. இதையடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு, பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் ‘பியூட்டி பார்லர்’ எனப்படும் அழகு நிலையங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுமார் 25 ஆயிரம் அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டதில் சுமார் 1,500 அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 

முறையாக அழகு கலை படிப்பு படித்த ஆயிரக்கணக்கான பெண்கள் இதில் பணியாற்றி வந்த நிலையில், தற்போது அழகு நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற தாங்கள் தயாராக இருப்பதாகவும், அழகு நிலையங்களை கட்டுப்பாடுகளுடன் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அழகு கலை நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story