மாநில செய்திகள்

ஆக்சிஜன் தேவை, அத்தியாவசிய மருந்துகள் இருப்பை கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் + "||" + Oxygen requirement, 4 IAS to monitor the presence of essential drugs. Appointment of officers

ஆக்சிஜன் தேவை, அத்தியாவசிய மருந்துகள் இருப்பை கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

ஆக்சிஜன் தேவை, அத்தியாவசிய மருந்துகள் இருப்பை கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை, அத்தியாவசிய மருந்துகள் இருப்பை கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் தற்போது பெருகிவரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளது. அதனில், பெருநகர மாநகராட்சி பகுதிகளில் நோய்த் தொற்றை குறைக்கும் பொருட்டு மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் கள அளவிலான குழுக்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. 

பொது சுகாதாரம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் இயங்கி வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் மாநில அளவில் மேற்கொள்ளப்படும் பெருந்தொற்று தடுப்பு பணியில், 4 ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளை சுழற்சி முறையில் பணியாற்ற ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு அறையில் 29-ந் தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் 12-ந் தேதி வரை பணிபுரிய ஆணையிடப்பட்ட, அனாமிகா ரமேஷ் (ஆக்சிஜன் தேவையினை கண்காணித்தல்), கவுரவ் குமார் (அத்தியாவசிய மருந்துகள் இருப்பினை கண்காணித்தல்), ஆர்.ஐஸ்வர்யா, கட்டா ரவி தேஜா (மருத்துவமனைகள் படுக்கை இருப்பினை கண்காணித்தல்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நெதர்லாந்தில் இருந்து விமானம் மூலம் தமிழகத்திற்கு வந்த ஆக்சிஜன்
தட்டுப்பாட்டை போக்க நெதர்லாந்தில் இருந்து இந்திய ஏர்போர்ஸ் விமானம் மூலம் தமிழகத்திற்கு ஆக்சிஜன் வந்தது
2. ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க 5 நாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி
ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க 5 நாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. இன்று இரவுக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் மத்திய அரசிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மே 3 க்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசை கேட்டு கொண்டு உள்ளது.
4. நாட்டில் நிலவும் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை அடுத்த மாதம் இரண்டாவது வாரம் சீரடையும்
நாட்டில் நிலவும் மருத்துவ ஆக்சிஜன் பற்றாக்குறை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் சீரடையும் என தகவல் வெளியாகி உள்ளது.
5. அடுத்த ஒரு மாதத்திற்குள் டெல்லியில் 44 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்படும் - முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
அடுத்த ஒரு மாதத்திற்குள் டெல்லியில் 44 ஆக்சிஜன் ஆலைகளை அமைக்க உள்ளோம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார்.