கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜனுடன் கூடிய 3 ஆயிரம் படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்தன


கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜனுடன் கூடிய 3 ஆயிரம் படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்தன
x
தினத்தந்தி 28 April 2021 9:24 PM GMT (Updated: 28 April 2021 9:24 PM GMT)

கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜனுடன் கூடிய 3 ஆயிரம் படுக்கைகள் பயன்பாட்டுக்கு வந்தன.

சென்னை,

கொரோனா 2-வது அலையை எதிர்கொள்ளவும், பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்கவும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கூடுதலாக 12 ஆயிரத்து 370 ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கை வசதிகள் அமைக்க பொதுப்பணித்துறைக்கு (கட்டிடம்) உத்தரவிட்டிருந்தது.

இதனை ஏற்று மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள மருத்துவ துறை அதிகாரிகளிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்தாலோசித்து எந்த ஆஸ்பத்திரிகளுக்கு எத்தனை ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் தேவை என்று கணக்கிடப்பட்டது.

இதனை தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் மாநிலம் முழுவதும் பணிகள் தொடங்கப்பட்டன. இதுகுறித்து சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை தலைமையிடத்தில் இருந்து தினசரி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நேற்றைய நிலவரப்படி 3 ஆயிரம் படுக்கைகளில் ஆக்சிஜன் இணைப்பு வழங்கப்பட்டது. குறிப்பாக ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும் இடத்தில் இருந்து ஒவ்வொரு படுக்கைகளுக்கும் 2 குழாய்கள் மூலம் காற்று மற்றும் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இது செயல்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போது இந்த அனைத்து படுக்கைகளும் உடனடியாக பயன்பாட்டுக்கு வந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story