மாநில செய்திகள்

ஓரினச்சேர்க்கை பெண் ஜோடிக்கான விதிமுறைகளை உருவாக்க வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட்டு நீதிபதி உளவியல் கலந்தாய்வுக்கு செல்ல முடிவு + "||" + ICC judge decides to go for psychological consultation

ஓரினச்சேர்க்கை பெண் ஜோடிக்கான விதிமுறைகளை உருவாக்க வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட்டு நீதிபதி உளவியல் கலந்தாய்வுக்கு செல்ல முடிவு

ஓரினச்சேர்க்கை பெண் ஜோடிக்கான விதிமுறைகளை உருவாக்க வழக்கை விசாரிக்கும் ஐகோர்ட்டு நீதிபதி உளவியல் கலந்தாய்வுக்கு செல்ல முடிவு
ஓரினச்சேர்க்கை பெண் ஜோடிக்கான விதிமுறைகளை உருவாக்கி தீர்ப்பு எழுதுவதற்காக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி உளவியல் கலந்தாய்வுக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
சென்னை, 

மதுரையைச் சேர்ந்த இரு இளம்பெண்கள், ஓரினச்சேர்க்கை தொடர்பினால் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவந்து விட்டனர். தொழிலதிபர்களான இவர்களது பெற்றோர் மதுரை மாவட்டத்தில் உள்ள 2 போலீஸ் நிலையங்களில் புகார் செய்தனர். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், இரு பெண்களையும் பிடிக்க வலை வீசித் தேடி வந்தனர். இதனால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் இரு பெண்களும் மனு தாக்கல் செய்தனர்.

கலந்தாய்வு

இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இளம்பெண்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் உளவியல் ரீதியான கலந்தாய்வு வழங்க அவர் உத்தரவிட்டார். அதன்படி, உளவியல் நிபுணர் வித்யா தினகரன் இருதரப்புக்கும் கவுன்சிலிங் வழங்கினார்.

இந்நிலையில் இந்த வழக்கு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உளவியல் நிபுணர் அறிக்கை தாக்கல் செய்தார்.

பெற்றோர் வேதனை

அதில், இளம்பெண்கள் இருவரும் தங்களிடையே உள்ள உறவுமுறையை நன்றாக புரிந்துவைத்துள்ளனர். ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்கின்றனர். பெற்றோர் தங்களது உறவை புரிந்துகொண்டு தங்களை ஏற்றுக்கொள்வார்கள், அவர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்றெல்லாம் விரும்புகின்றனர்.

ஆனால், இந்த இரு பெண்களின் உறவால் அவர்களது பெற்றோர் கடுமையான மனவேதனையில் உள்ளனர். சமூகமும், சமுதாயமும் தங்களை கேவலமாகப் பார்க்குமே என்று வேதனைப்படுகின்றனர். ஓரினச்சேர்க்கையாளர்களாக வாழ்வதற்குப் பதில் தங்களது மகள்கள் பிரம்மச்சாரினிகளாக மாறியிருக்கலாமே என்று எண்ணுகின்றனர். அதேநேரம், மகள்களின் பாதுகாப்பு குறித்தும் பயப்படுகின்றனர் என்று கூறப்பட்டு இருந்தது.

விதிமுறைகள்

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் ஐகோர்ட்டு தலையிட்ட பின்னர் போலீசார் எந்த தொந்தரவும் செய்யவில்லை. அதேநேரம், ஓரினச்சேர்க்கை ஜோடியை சமுதாயத்தில் கவுரவமாக நடத்தும் விதமாக தகுந்த விதிமுறைகளை இந்த ஐகோர்ட்டு உருவாக்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

எந்த ஒரு பரிணாம வளர்ச்சியும் ஒரே இரவில் ஏற்பட்டுவிடாது. எனவே, இந்த இளம்பெண்கள் இருவருக்கும், அவர்களது பெற்றோருக்கும் வருகிற மே மாதம் மீண்டும் உளவியல் கலந்தாய்வு வழங்க உளவியல் நிபுணருக்கு உத்தரவிடுகிறேன். ஓரினச்சேர்க்கை ஜோடிக்கான தகுந்த விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றால், முதலில் எனக்கு விழிப்புணர்வு தேவை.

உளவியல் ஆலோசனை

எனவே, நானும் இந்த விவகாரம் குறித்து உளவியல் ரீதியான கலந்தாய்வுக்கு செல்ல விரும்புகிறேன்.

அதன்மூலம், ஓரினச்சேர்க்கை ஜோடியின் நிலை குறித்து என்னால் புரிந்துகொள்ள முடியும். விதிமுறைகளை உருவாக்கி தீர்ப்பு வழங்க கலந்தாய்வு உதவும். எனவே, எனக்கு உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என்று உளவியல் நிபுணர் வித்யா தினகரனை கேட்டுக்கொள்கிறேன். இந்த வழக்கை ஜூன் 7-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளிடம் கடன் தொகையை வசூலிக்க அவகாசம் கோரி வழக்கு: முதல்-அமைச்சர் கடிதத்தின் பேரில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
விவசாயிகளிடம் கடன் தொகையை வசூலிக்க அவகாசம் கோரி தொடரப்பட்ட வழக்கில், இதுதொடர்பாக முதல்-அமைச்சர் அனுப்பிய கடிதத்தின்பேரில் எடுத்த நடவடிக்கையை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
2. நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க உடனடி நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
நெல் மூட்டைகள் மழையால் நனைந்து வீணாவதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. ஏழைகளுக்கு வழங்கிய நிலத்தில் மணல் குவாரி நடத்தியது எப்படி? கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
ஏழைகளுக்கு வழங்கிய நிலத்தில் மணல் குவாரி நடத்தியது எப்படி? இதற்கு துணை போன அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தூத்துக்குடி கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
4. சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் புதிய விதிகளை எதிர்த்து வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தும் புதிய விதிகளை எதிர்த்து வழக்கு மத்திய அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.
5. தண்டனை விதிப்பதற்கு முன்பு சிறையில் இருந்த காலத்தையும் கைதிகள், பரோலில் செல்வதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்
தண்டனை விதிப்பதற்கு முன்பு சிறையில் இருந்த காலத்தையும் கைதிகள், பரோலில் செல்வதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.