ஆக்சிஜன் தேவை, அத்தியாவசிய மருந்துகள் இருப்பை கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்


ஆக்சிஜன் தேவை, அத்தியாவசிய மருந்துகள் இருப்பை கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
x
தினத்தந்தி 29 April 2021 2:28 AM GMT (Updated: 29 April 2021 2:28 AM GMT)

ஆக்சிஜன் தேவை, அத்தியாவசிய மருந்துகள் இருப்பை கண்காணிக்க 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்.

சென்னை,

தமிழகத்தில் தற்போது பெருகிவரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு வழிமுறைகளை கையாண்டுள்ளது. அதனில், பெருநகர மாநகராட்சி பகுதிகளில் நோய்த் தொற்றை குறைக்கும் பொருட்டு மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்துக்கும் கள அளவிலான குழுக்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

பொது சுகாதாரம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தில் இயங்கி வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் மாநில அளவில் மேற்கொள்ளப்படும் பெருந்தொற்று தடுப்பு பணியில், 4 ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளை சுழற்சி முறையில் பணியாற்ற ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு அறையில் 29-ந் தேதி (இன்று) முதல் அடுத்த மாதம் 12-ந் தேதி வரை பணிபுரிய ஆணையிடப்பட்ட, அனாமிகா ரமேஷ் (ஆக்சிஜன் தேவையினை கண்காணித்தல்), கவுரவ் குமார் (அத்தியாவசிய மருந்துகள் இருப்பினை கண்காணித்தல்), ஆர்.ஐஸ்வர்யா, கட்டா ரவி தேஜா (மருத்துவமனைகள் படுக்கை இருப்பினை கண்காணித்தல்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story