மாநில செய்திகள்

வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனர் ; இந்த வேலையை யார் செய்தது என்று தெரியவில்லை அதிமுக வேட்பாளர் புலம்பல் + "||" + Banner placed as winner AIADMK candidate laments not knowing who did this job

வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனர் ; இந்த வேலையை யார் செய்தது என்று தெரியவில்லை அதிமுக வேட்பாளர் புலம்பல்

வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனர் ; இந்த வேலையை யார் செய்தது என்று தெரியவில்லை அதிமுக வேட்பாளர் புலம்பல்
காங்கேயத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக வைக்கப்பட்ட பேனர், உடனடியாக அகற்றப்பட்டது
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் வெள்ளக்கோவில் சாமிநாதனும், அதிமுக சார்பில் ஏ.எஸ்.ராமலிங்கமும் போட்டியிட்டனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பே, அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் சுமார் 13ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாகவும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பழையக்கோட்டைபுதூர் பகுதியில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அலுவலருக்கு தகவல் அளித்த நிலையில், பேனர் உடனடியாக அகற்றப்பட்டது.

இதுதொடர்பாக அதிமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராமலிங்கம்  கூறும்போது, இந்த வேலையை யார் செய்தது என்று தெரியவில்லை. ஆர்வமிகுதியால் செய்தார்களா அல்லது என் பெயரை கெடுக்கும் நோக்கில் செய்தார்களா என்பது புரியவில்லை. கட்சிக்காரர்களிடம் விசாரித்தபோது, அவர்களும் தெரியவில்லை என்று கூறினர். திருப்பூர்மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடமும் புகார் அளிக்க இருக்கிறேன்"  என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் இன்று பதவியேற்பு
தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத 10 புதிய எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
2. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்
தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதப்வீதம் பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்தக் சங்க அறிக்கை கூறி உள்ளது.
3. 30 ஆண்டுக்கு பிறகு காங்கேயம்,தாராபுரம் தொகுதிகளுக்கு அமைச்சர் அந்தஸ்து
சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் காங்கேயம்,தாராபுரம் தொகுதிக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
4. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் ; தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
5. திமுக, அதிமுக அடுத்து தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்
தமிழக சட்டசபை தேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றது என்று தேர்தல் ஆணையம் விவரங்களை வெளியிட்டுள்ளது.