மாநில செய்திகள்

உடல் வெப்பம் அதிகம் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி கிடையாது - தேர்தல் ஆணையம் + "||" + If the body temperature is high No admission is allowed inside the counting center Election Commission

உடல் வெப்பம் அதிகம் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி கிடையாது - தேர்தல் ஆணையம்

உடல் வெப்பம் அதிகம் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி கிடையாது - தேர்தல் ஆணையம்
உடல் வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி கிடையாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
சென்னை: 

தமிழக சட்டசபை தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறவுள்ளது. இந்தப் பணியில் அரசு அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா். வாக்கு எண்ணிக்கையைப் பாா்வையிட வேட்பாளா்களின் முகவா்களும் வரவுள்ளனா்.

மேலும் யாரெல்லாம் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரவுள்ளனரோ அவா்கள் அனைவருக்கும் முக கவசம், முகத்தை மூடும் பிளாஸ்டிக் கவசம் ஆகியன கட்டாயமாகும் என ஏற்கனவே தெரிவித்து இருந்த நிலையில் தற்போது மேலும் பல கட்டுப்பாடுகளை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:-

சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை மேசைகளில் மாற்றம் இருக்கலாம். அதிக வாக்குச்சாவடிகளைக் கொண்ட தொகுதிகளில் மேசைகளில் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

பெரும்பான்மையான வாக்கு எண்ணிக்கை மேசைகள் இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒவ்வொரு தொகுதி, அதிகாரிகளை பொறுத்து வாக்கு எண்ணும் மேசைகள் மாற்றம் செய்ய வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் ஊரடங்கு பிறப்பித்து தொடர்பாக அரசு தான் முடிவெடுக்கவேண்டும். வாக்கு எண்ணிக்கை தொடர்பான விவரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளோம். 

தேர்தல் வழிமுறைகளை பின்பற்றி மே 2-ம் தேதி வாக்கு எண்னிக்கை நடக்கும்.  உடல் வெப்பம்  98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந்தால் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

கொரோனா பரிசோதனையில் நெகடிவ் வந்தாலும் உடல்வெப்ப நிலை அதிகமாக இருந்தால் அனுமதி கிடையாது. தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 16,387 பேர் ஈடுப்படுத்தப்பட உள்ளனர் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் இன்று பதவியேற்பு
தமிழகத்தில் இதுவரை பதவியேற்காத 10 புதிய எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
2. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்
தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதப்வீதம் பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்தக் சங்க அறிக்கை கூறி உள்ளது.
3. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் ; தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
4. திமுக, அதிமுக அடுத்து தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்
தமிழக சட்டசபை தேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றது என்று தேர்தல் ஆணையம் விவரங்களை வெளியிட்டுள்ளது.
5. தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடர வேண்டும் -மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து
தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.