மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடக்கிறது + "||" + The DMK, led by MK Stalin. The meeting of district secretaries and candidates is going on today through video

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடக்கிறது

மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக இன்று நடக்கிறது
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காணொலி காட்சி வாயிலாக நடக்க இருக்கிறது.
சென்னை, 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந்தேதி நடந்து முடிந்தது. தமிழகத்தோடு சேர்ந்து கேரளா, அசாம், மேற்கு வங்காளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த 5 மாநிலங்களுக்குமான தேர்தல் முடிவுகள், மே 2-ந்தேதி (நாளை மறுதினம்) வாக்கு எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

அதன்படி, மேற்கு வங்காளம் மாநிலத்துக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இந்த 5 மாநிலங்களில் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகின. அந்தவகையில் தமிழகத்தை பொறுத்தவரையில், தி.மு.க. தான் ஆட்சி அமைக்கப்போகிறது என்ற கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது.

தி.மு.க. மாவட்ட செயலாளர் கூட்டம்

இந்த கருத்துக் கணிப்பு உண்மையா? பொய்யா? என்பது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தெரிந்துவிடும். இதற்கிடையில் தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி, இந்த கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்து இருக்கிறார்.

ஆலோசனை

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியான பிறகு, இந்த கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில், வாக்கு எண்ணும் மையத்தில் தி.மு.க. சார்பில் இருக்கும் முகவர்கள் எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும்?. எந்த தவறும் நடக்காமல் இருப்பதை அவர்கள் எவ்வாறு உறுதி செய்ய வேண்டும்? என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு மக்கள் பணியாற்ற வேண்டும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு மக்கள் பணி ஆற்ற வேண்டும் என்றும், சட்டமன்றத்தில் அதிக கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
2. மின்வாரிய குறைகளை தெரிவிக்க மின்னகம் என்ற பெயரில் புதிய நுகர்வோர் சேவை மையம் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
பொதுமக்கள் மின்சாரம் சார்ந்த குறைகளை தெரிவிக்க சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்னகம் என்ற புதிய மின்சார நுகர்வோர் சேவை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
3. சென்னையில் 250 படுக்கை வசதிகளுடன் கொரோனா குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 250 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
4. தமிழகத்தில் பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து தொடங்குமா? - மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் அடுத்ததாக ஊரடங்கு உத்தரவில் என்னென்ன தளர்வுகளை அளிக்கலாம் என்பது பற்றி மருத்துவ குழுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்குமா என்பது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகிறது.
5. டெல்லியில் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு இல்லத்தில் அரசு மரியாதையை ஏற்றுக் கொண்டார் !
மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார்.