ஏப்ரல் 30: மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்


ஏப்ரல் 30:  மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 30 April 2021 2:38 PM GMT (Updated: 30 April 2021 2:38 PM GMT)

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. 

அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18 ஆயிரத்து 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 66 ஆயிரத்து 756 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 128 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 16 ஆயிரத்து 7 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 37 ஆயிரத்து 582 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு இன்றைய விவரம்:-

அரியலூர் - 73
செங்கல்பட்டு - 1,215
சென்னை - 5,473
கோவை - 1,113
கடலூர் - 292
தர்மபுரி - 242
திண்டுக்கல் - 294
ஈரோடு - 519
கள்ளக்குறிச்சி - 77
காஞ்சிபுரம் - 445
கன்னியாகுமரி - 162
கரூர் - 176
கிருஷ்ணகிரி - 510
மதுரை - 691
நாகை - 161
நாமக்கல் - 327
நீலகிரி - 58
பெரம்பலூர் - 34
புதுக்கோட்டை - 148
ராமநாதபுரம் - 244
ராணிப்பேட்டை - 339
சேலம் - 547
சிவகங்கை - 130
தென்காசி - 121
தஞ்சாவூர் - 352
தேனி - 296
திருப்பத்தூர் - 206
திருவள்ளூர் - 905
திருவண்ணாமலை - 211
திருவாரூர் - 177
தூத்துக்குடி - 579
திருநெல்வேலி - 644
திருப்பூர் - 423
திருச்சி - 450
வேலூர் - 384
விழுப்புரம் - 377
விருதுநகர் - 297

மொத்தம் - 18,692

Next Story