மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் + "||" + Today and tomorrow in the inner districts of Tamil Nadu Weil Increases - Meteorological Center

தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தி்ல உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

தமிழகத்தில் திருச்சி, மதுரை, கடலூர், கரூர், சேலம், வேலூர் உள்பட மாவட்டங்களில் கத்திரி வெயில் காலம் 4-ந்தேதி தொடங்கும் நிலையில் கோடை வெயில் 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வருகிறது. தலைநகர் சென்னையிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 1-ந் தேதி (இன்று), 2-ந் தேதி (நாளை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் சேலம், தர்மபுரி, ஈரோடு, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தமிழக உள் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நிலவிய அதிகபட்ச வெப்பநிலை அடுத்து வரும் 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) இயல்பைவிட 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி (இன்றும், நாளையும்) நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. “ஆக்சிஜன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் உற்பத்தியாளர்களுக்கு 30 சதவீத மூலதன மானியம்” - தமிழக அரசு அறிவிப்பு
முன்னுரிமை அடிப்படையில் சிப்காட், சிட்கோ மூலம் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2. தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களில் கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள் - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்திற்கு அடுத்த 2 நாட்களில் கூடுதலாக 13 லட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் மே 14ம் தேதி ரமலான் திருநாள் கொண்டாடப்படும் - தலைமை காஜி அறிவிப்பு
தமிழகத்தில் மே 14ம் தேதி (வெள்ளிக்கிழமை) ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
4. அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் ஒரேநாளில் 30 ஆயிரத்தை தாண்டிய தொற்று எண்ணிக்கை
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,355 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை - மத்திய அமைச்சரிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துகள் தேவை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் முதல்-அமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.