மாநில செய்திகள்

நாளை முழு ஊரடங்கு: ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு + "||" + Full curfew tomorrow: Rail ticket booking centers will not function Chennai Railway Division announces

நாளை முழு ஊரடங்கு: ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு

நாளை முழு ஊரடங்கு: ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்காது; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காரணமாக மே 2-ந் தேதி (நாளை), தெற்கு ரெயில்வேயின் கீழ் இயங்கும் சென்னை ரெயில்வே கோட்டத்தில் செயல்படும் அனைத்து பயணிகள் டிக்கெட் முன்பதிவு மையங்களும் இயங்காது.

டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்து செய்ய முன்பதிவு மையங்களை பொதுமக்கள் அணுக வேண்டாம். எனினும் நடப்பு முன்பதிவு கவுண்ட்டர்கள் வழக்கம்போல் செயல்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.