இன்று மே தினம்: மின்சார ரெயில்கள் வார நாட்கள் அட்டவணைபடி இயக்கப்படும்; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு


இன்று மே தினம்: மின்சார ரெயில்கள் வார நாட்கள் அட்டவணைபடி இயக்கப்படும்; சென்னை ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 May 2021 3:12 AM GMT (Updated: 1 May 2021 6:25 AM GMT)

கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால், சென்னையில் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டது.

சென்னை,

கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால், சென்னையில் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டது.  அதன்படி 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், 480 மின்சார ரெயில் சேவையாக குறைக்கப்பட்டது.

வார நாட்களில் 480 மின்சார ரெயில் சேவைகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் 100-க்கும் குறைவான மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்பட்டு வந்தது. விடுமுறை நாட்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மின்சார ரெயில்களை சென்னை ரெயில்வே கோட்டம் இயக்கி வந்தது.

இந்தநிலையில் மே தினம் விடுமுறை நாளான இன்று(சனிக்கிழமை) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைபடி மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என முதலில் சென்னை ரெயில்வே கோட்டம் அறிவித்தது. பின்னர் அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் ரெயில் பயணிகள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மே தினமான இன்று (1-ந்தேதி) வார நாட்கள் அட்டவணைபடியே மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்து உள்ளது.

 


Next Story