மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,588 பேருக்கு கொரோனா உறுதி: 17,164 பேர் ‘டிஸ்சார்ஜ்' + "||" + COVID19 Tamil Nadu reports 19,588 new cases, 147 deaths and 17,164 recoveries; active cases 1,15,128

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,588 பேருக்கு கொரோனா உறுதி: 17,164 பேர் ‘டிஸ்சார்ஜ்'

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 19,588 பேருக்கு கொரோனா உறுதி: 17,164 பேர் ‘டிஸ்சார்ஜ்'
தமிழகத்தில் நாளுக்கு நாள் மிக வேகமாக பாதிப்பு உயர்ந்து வருகிறது. அந்தவகையில் இன்று ஒரே நாளில் 19,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக  19 ஆயிரத்து 588  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 17,164 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 10,54,746 பேர். 

மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,24,24,611 ஆகும். இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,45,731 ஆகும். மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 11,86,344 ஆக உள்ளது.

கொரோனாவிற்கு 147 பேர் உயிரிழந்தனர். 55 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவராவார், 92 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 14,193 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 4791 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிகளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 114 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 33 பேர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்