மாநில செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல்: திருச்சியில் 9 இடங்களில் தி.மு.க. முன்னிலை + "||" + Tamil Nadu Assembly elections: DMK wins 9 seats in Trichy Presence

தமிழக சட்டமன்ற தேர்தல்: திருச்சியில் 9 இடங்களில் தி.மு.க. முன்னிலை

தமிழக சட்டமன்ற தேர்தல்: திருச்சியில் 9 இடங்களில் தி.மு.க. முன்னிலை
தமிழக சட்டமன்ற தேர்தலில், நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் திருச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளுக்கு 4 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) ஆகிய 9 சட்டப் பேரவை தொகுதிகளில் கடந்த 6ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. 9 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 73.56 சதவீதம் (17,20,279 பேர்) வாக்குப்பதிவானது. இந்த வாக்குகள் பதிவான இயந்திரங்கள் அனைத்தும் மூடி, முத்திரையிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. 

9 தொகுதிகளிலும் மொத்தம் 5,688 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த இயந்திரங்கள் அந்தந்த தொகுதி வாரியாக பிரித்து அதற்கான பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில், நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் திருச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் தி.மு.க. முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இதன்படி ,

மணப்பாறை - 160 வாக்குகள் வித்தியாசம்

ஸ்ரீரங்கம் - 68 வாக்குகள் வித்தியாசம்

திருச்சி மேற்கு - 2905 வாக்குகள் வித்தியாசம்

திருச்சி கிழக்கு  - 3572 வாக்குகள் வித்தியாசம்

திருவெறும்பூர் - 2424 வாக்குகள் வித்தியாசம்

லால்குடி - 252 வாக்குகள் வித்தியாசம் 

மண்ணச்சநல்லூர் - 2844 வாக்குகள் வித்தியாசம்

முசிறி - 1847 வாக்குகள் வித்தியாசம்

துறையூர் - 1829 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை வகித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கு காரணமாக திருச்சியில் இரவில் விமானங்கள் இயங்க தடை
ஊரடங்கு காரணமாக திருச்சியில் இரவில் விமானங்கள் இயங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
2. சட்டமன்ற தேர்தல்: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உழைத்தவர்களுக்கு நன்றி - முத்தரசன் அறிக்கை
சட்டமன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு உழைத்தவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
3. கரூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 3,180 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
கரூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 3,180 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
4. கொரோனா பரவலை தடுக்க வாக்காளர்கள் கையுறை பயன்படுத்தியே வாக்களிக்க வேண்டும்
வாக்காளர்கள் கையுறை பயன்படுத்தியே வாக்களிக்க வேண்டும்.
5. அசாம்,மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தல்: முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் இன்று (சனிக்கிழமை) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.